அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 3 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகிறது.

அதன்படி, சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை 111 ரூபாய்க்கும், காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply