அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1 ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22-ந் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் 72 ஆயிரத்து 120-ரூபாய்க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 800-ரூபாய்க்கு விற்பனையானது.

ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய்உயர்ந்து 9 ஆயிரத்து 100-ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஆயிரத்து 320 குறைந்து 71 ஆயிரத்து 40ரூபாய்க்கும், கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 880-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து 109 ரூபாய்க்கும், கட்டி வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.