அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!

சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார்.
தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கத்திக் கூச்சல்போட முயற்சித்தபோது, அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறினார்.
விசாரணையின் முடிவில், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனக் காவலாளி மோத்திவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது