குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் – டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அறிவிப்பு !

குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குருப் 4 எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்