தங்கம் விலை அதிரடி குறைவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.

அந்த வகையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை 5 ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், கட்டி வெள்ளியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.