மதுரை | பிரபல தொழிலதிபர் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 6 பேர் கைது !

மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரையில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் சுந்தர்.இவர் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார்.


இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தொழிலதிபரை தேடி வருகின்றனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக பலரை போலீசார் தேடி வருகின்றனர். தொழிலதிபர் சுந்தரத்திற்கும் மரியராஜ்க்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும்,மரியராஜ் காவல்துறையிடம் வேற எந்த தகவலையும் முழுமையாக கூறவில்லை, அவர் வாய் திறந்து பேசும் பட்சத்திலேயே இந்த கடத்தல் வழக்கில் முழுமையான விவரங்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts