இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.
நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் 39 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழக்க, இந்தியா 170 ரன்களை மட்டும் எடுத்து 22 ரன்னில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.