91ஆயிரத்தை தாண்டிய பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பம் !

பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடக்கி தொடங்கப்பட்டது

பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக ஐந்தாவது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், 39 ஆயிரத்து 633 பேர் கட்டணம் செலுத்தியும், 17 ஆயிரத்து 255 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 6 ம் தேதி என்றும் தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: ஜூன் 27ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts