வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் !

வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாகியும் உலக பணக்காரர்களில் முதல் இருப்பவருமான எலான் மஸ்க், “இது வெறும் கீறல்தான்” எனப் பதிவிட்டுள்ளார்.
உலகத்தில் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் செய்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் பகுதியில், ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனைக்காக நிலைநிறுத்தப்பட்டது. MASSEY சோதனை மையத்தில் ராக்கெட்டின் எஞ்சின் இயக்கப்பட்ட சில வினாடிகளுக்குள் சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாகியும் உலக பணக்காரர்களில் முதல் இருப்பவருமான எலான் மஸ்க், “இது வெறும் கீறல்தான்” எனப் பதிவிட்டுள்ளார்.