தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு !

தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர்.
அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் திடீரென கலைந்து அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில், அவ்வழியாக சென்ற 5க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது.
இதனையடுத்து, அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான தம்பதியினர் சண்முகம்பிள்ளை மற்றும் மகராசி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.