ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு வேளாங்கண்ணியில் கொண்டாட்டம் !

ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு பிரார்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தலமாக வேளாங்கண்ணி தேவாலயத்தில், அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், இயெசு உயிர்தெழுந்த நிகழ்வுகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நிறைவேற்றப்பட்டது