சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர்.
31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக வீரர்கள் தயாராக இருந்தனர்.
அதன்பிறகு நேற்று மாலை 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பும் பயணத்தை வீரர்கள் துவங்கினர்.
முன்னதாக, மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிராகன் விண்கலம் தாமதமாகப் புறப்பட்டது.
இதையடுத்து, சுமார் 22 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று விண்கலம் பூமிக்கு வந்தடைந்தது.
வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம், பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.