மதுரையில் இன்று நடைபெறுகிறது திமுக பொதுக்குழு கூட்டம் !

2026 தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது .
தமிழகத்தின் முதல்வரும் திமுக கட்சியின் தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஜுன்1 மதுரையில் மாபெரும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
2026 தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டம் காலை 9 மணியளவில் தொடங்கி, அடுத்தடுத்து கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றனர்.
மேலும்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைத்து நிர்வாகிகளும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 1.05 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தடைந்தார்.
அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது.
பின்னர், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரான முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.