திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை-ஒன்றிய சுகாதாரத்துறை !

திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்தது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு வருவதாக தகவல் பரவியது. இந்த தகவல் மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை எனவும், கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பு இல்லை எனவும் அதேசமயம், ஏற்கனவே இருக்கக்கூடிய அடிப்படை உடல்நலப் பிரச்னைகள், மரபணு பிரச்னைகள், ஆபத்தான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆகியவை விவரிக்கப்படாத திடீர் உயிரிழப்புகளுக்கு பங்கு வகிக்கின்றன எனவும் கொரோனா தடுப்பூசி தான் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது தவறானது எனவும் விளக்கமளித்துள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts