செர்பியா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் !

செர்பியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் வெக்னிக் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டில் அதிபர்அலெக்சாண்டருக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டிய நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவியது. அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.