நடிகர் தனுஷ் நடிப்பில் 2025 நவம்பரில் வெளியான ஹிந்தி திரைப்படத்திற்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு!
நடிகர் தனுஷ் நடிப்பில் 2025 நவம்பரில் வெளியான ஹிந்தி திரைப்படம் தேரே இஸ்க் மேன் (Tere Ishk Mein)க்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு கோரி இரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் (Eros International) வழக்கு தொடர்ந்துள்ளது.
பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தேரே இஸ்க் மேன் படத்தை ராஞ்சனா (Raanjhanaa, 2013) படத்தின் “ஸ்பிரிச்சுவல் சீக்வல்” (spiritual sequel) என்று விளம்பரப்படுத்தியதாகவும், அதன் மூலம் ராஞ்சனாவின் பிராண்ட், கதாபாத்திரங்கள், இசை, தீம்கள் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்:தேரே இஸ்க் மேன் டீசரில் “World of Raanjhanaa” போன்ற ஹேஷ்டேக் மற்றும் பிரேஸ்கள் பயன்படுத்தப்பட்டது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஷங்கர் – ராஞ்சனாவில் தனுஷ் நடித்த குந்தன் ஷங்கர் போன்று இருப்பது. முகமது ஜீஷான் அய்யூப் நடித்த முராரி கதாபாத்திரம் இரு படங்களிலும் ஒத்திருப்பது. ராஞ்சனாவின் பின்னணி இசை, ஃபுட்டேஜ், உணர்ச்சி வளர்ச்சி போன்றவை ஒத்திருப்பது.
இதனால் டிரேட்மார்க் இன்ஃப்ரிஞ்ச்மென்ட், காப்பிரைட் வயலேஷன், பாஸிங் ஆஃப் (passing off) என்று குற்றச்சாட்டு.
Eros நிறுவனம் 2025 ஜூலை 25-ஆம் தேதி cease-and-desist நோட்டீஸ் அனுப்பியது, செப்டம்பரில் ரிமைண்டர் கொடுத்தது. சில விளம்பரங்கள் நீக்கப்பட்டாலும், படம் வெளியான பிறகும் (நவம்பர் 28, 2025) ஒற்றுமைகள் தொடர்ந்ததாகக் கூறியுள்ளது.வழக்கில் Eros கோரும் ரூ.84 கோடி இழப்பீடு – ராஞ்சனாவின் நல்லெண்ணத்தை (goodwill) தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக.
தேரே இஸ்க் மேன் படம் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், கிரிதி சனோன் நடிப்பில் வெளியாகி உலகளவில் சுமார் ரூ.150-180 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது. AR ரஹ்மான் இசை, ஹிமான்ஷு ஷர்மா கதை. ராஞ்சனாவின் 10ஆம் ஆண்டு நிறைவில் அறிவிக்கப்பட்ட இப்படம் “ராஞ்சனா உலகில்” அமைந்ததாக விளம்பரம் செய்யப்பட்டது.இந்த வழக்கு தற்போது பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. Eros-இன் இந்த நடவடிக்கை படத்தின் OTT வெளியீட்டையும் (Netflix) பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

