மதராசி கேம்ப் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பெரும்பாலான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட உரிமை பெற்ற 189 குடும்பங்களுக்கு வழங்கிடவும், விரைவான சமூக உள்கட்டமைப்பு மற்றும் பிரத்யேகமான போக்குவரத்து சேவைகளை வழங்கிடவும் வேண்டும் என்றும்
மீதமுள்ள 181 குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு, குடியிருப்புத் தேவைகள் மற்றும் வைப்புத்தொகை நிபந்தனைகளில் சிறப்புத் தளர்வுகளை வழங்கி, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான வீடுகளைப் பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்திட வேண்டும்.
தற்காலிக டெல்லி தமிழ்க் கல்விச் சங்கத்தின் பள்ளியை அனுமதிப்பதன் மூலம் தற்காலிக தமிழ் வழிப் பள்ளியை நிறுவுதல், உடனடி சேர்க்கை மற்றும் சிறப்புப் போக்குவரத்து வசதிகளுடன் அல்லது நிரந்தர வசதிகள் தயாராகும் வரை ஒதுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இடைக்கால போக்குவரத்து வசதியுடன் அருகிலுள்ள டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் பயிற்றுவிப்பை அங்கீகரித்தல் போன்றவற்றைச் செய்திட வேண்டும் என்றும் இடம்பெயர்ந்த பெண்களுக்கு இலக்குடன் கூடிய தொழில் பயிற்சி மற்றும் குறு நிறுவன மானியங்கள் மூலம் வாழ்வாதார ஆதரவைத் திரட்டிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்