சென்னை| அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.
அந்த வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து 119 ரூபாய்க்கும், கட்டி வெள்ளியின் விலை ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.