வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை -1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியதால் பரபரப்பு !

கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம்.
இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது.
அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்