ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த […]

அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு !

ஈரானில், செய்தி நேரலையின்போது அரசு தொலைக்காட்சி நிலையத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று இரவு, இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் கடும் சேதமடைந்தது. இந்தத் தாக்குதல் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது நிகழ்ந்தது. வெடிப்புச் சம்பவமும், நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் மேடையில் இருந்து இறங்கி பாதுகாப்புக்காக வெளியேறினார். தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் இடிந்து […]

ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக தகவல் – இஸ்ரேல் பாதுகாப்புத்துறை !

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள், உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. ஈரான் ராணுவ நிலைகள் மீது […]

இஸ்ரேல் – ஹமாஸ் போர்| ‘Operation Rising Lion’ என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடக்கம் !

peration Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் . இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக இருந்த பல்வேறு அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து,அந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கண்டம்விட்டு […]

தென்னாப்பிரிக்கா வெள்ளப் பெருக்கில் சிக்கி 49 பலி !

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் நிலவி வரும் குளிர் காலநிலையால், அந்நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குளிர் காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெகோலிக்னி கிராமத்தில், பள்ளிக்குச் சென்ற பள்ளி வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 13 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று தொடங்கியது. லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் […]

தைவான் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கம் !

தைவான் தடகளப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் 2 நாட்கள் நடந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி நாளில், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி, மூன்று முறை தேசிய சாம்பியனான வித்யா ராம்ராஜ், ரோஹித் யாதவ், பூஜா மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். 2-வது நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை […]

எலான் மஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் டிரம்ப் !

ஜனநாயக கட்சியினருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு முழு ஆதரவாக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் […]

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு !

கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், தலைநகர் பொகொடாவில் நேற்று நடந்த பிரசார நிகழ்ச்சியில் மிகுல் உர்பெல் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது முதுகு […]

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளித்த ஆசிய வளர்ச்சி வங்கி -கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !

பாகிஸ்தானுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதியுதவி அளிப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும். இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி […]