செர்பியா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் !
செர்பியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இந்நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் வெக்னிக் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அந்நாட்டில் அதிபர்அலெக்சாண்டருக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டிய நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவியது. அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது […]
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் – டொனால்ட் டிரம்ப்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப் போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18வது முறையாகப் பேசியுள்ளார். கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார். நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றும் இரு […]
41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது நபர் என்ற சாதனையை விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி […]
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் திட்டமிட்டபடி விண்ணிற்கு புறப்பட்டது. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது.இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி […]
ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா!
ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார். செக் குடியரசு நாட்டில் நேற்று ‘ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பியில் 83.45 மீட்டர் தூரம் வரை ஈட்டியை […]
ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும்-டிரம்ப் எச்சரிக்கை !
ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியே ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, ஹமாஸ் […]
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திரும்பியது கவலையளிக்கிறது – ஐ.நா. கவலை!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ […]
வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை -1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியதால் பரபரப்பு !
கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம். இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் […]
வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் !
வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாகியும் உலக பணக்காரர்களில் முதல் இருப்பவருமான எலான் மஸ்க், “இது வெறும் கீறல்தான்” எனப் பதிவிட்டுள்ளார். உலகத்தில் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் […]
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் உயிரிழப்பு !
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். […]