உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!
உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா 3 நாட்களில் 2வது முறையாக வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஃப்ரீ ஸ்டைல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர், ஒரு ஆண்டில் 5 கட்டங்களாக நடத்தப்படும். ஏற்கனவே 3 கட்டங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 4வது கட்டமாக அமெரிக்காவில் நடந்து […]
உக்ரைன் மீது 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் ..ஒருவர் பலி!
உக்ரைன் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 241வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு நரம்பு நோய்!
அதிபர் ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த நோய், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் தேங்குவதால், நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது என்றும், இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் […]
சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் !
சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் போக்கு நீடித்தது. இந்த நிலையில், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு […]
நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு !
நியூயார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நெடுஞ்சாலைகள் மற்றும், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் […]
சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !
சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி […]
14ம் தேதி பூமி திரும்ப இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து வரும் 14ம் தேதி இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா புறப்படுகிறார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த 4 வீரர்கள் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26ம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி […]
இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு -பி.சி.சி.ஐ அறிவிப்பு !
அடுத்த மாதம் நடைபேற இருந்த இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஓத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட்டு மாதம் 17ம் தேதி தொடங்க இருந்த நிலையில் வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக […]
கடலில் மூழ்கும் அபாயத்தில் துவாலு தீவு -ஆஸ்திரேலியாவிற்கு தஞ்சம் அடையும் மக்கள் !
துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா அருகிள்ள உலக வரைபடத்தில் புள்ளி போன்று தெரியக்கூடிய துவாலு என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவு இன்னும் 25 ஆண்டுகளில் கடலுக்குள் முழுமையும் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சில சின்னஞ்சிறு தீவுகள் கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் துவாலு தீவில் வசித்து வரும் மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக குடிபெயர்வதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும்,இந்த தீவில் 11 ஆயிரம் […]
உக்ரைன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய ரஷியா-மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு !
உக்ரைன் மீது ஒரே நாளில், 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் – ரஷியா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா தீவிரத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அண்மையில், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது 477 டிரோன்கள், 60 ஏவுகணைகள் மூலம் ரஷியா […]