அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்று ஜூலை 21ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது, உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் […]
ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் !
ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1989 ஆண்டு […]
பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது !
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. […]
அகமதாபாத் விமான விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி!
அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான விமானத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான் விமானத்தின் பயணத்திட்டம். மேலும், இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர்,பயணிகளில் […]
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது எனவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பாஜக […]
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – தமிழக அரசு அறிவிப்பு !
அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதி காண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதியில் நடைபெற்ற 2025 – 2026 மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்புக் காலம், 2021, ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டது என்றும் தற்போதைய விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் […]
துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி|சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு !
தூத்துக்குடி, அருகே, சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், மூச்சுத் திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சார்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி, சங்கு குளிக்கும் மீனவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல், கனி என்பவரது படகில் ஆறு பேருடன் சென்ற மாயாண்டி, நடுக்கடலில் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாயாண்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து […]
விருதுநகர்| ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து விபத்து !
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி பொங்கலையொட்டி, விருதுநகரில் தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பொருட்காட்சிக்கு சென்ற கவுசல்யா என்பவர் அங்குள்ள ராட்டினத்தில் சுற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கவுசல்யா திடீரென தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மீட்டு பொருட்காட்சியில் தயார் நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் […]