அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!
சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் […]
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு !
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், திமுக சார்பில் […]
கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் -நேற்று ஒரு நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் !
கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று மட்டும் 1.66 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர். இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் […]
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு !
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை […]
தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி !
வளர்ச்சியடைந்த ஒரே காரணத்துக்காக தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என்றும், நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது என்றும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு […]
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில் ஒப்பந்தம் !
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 இரயில் பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ இரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Alstom Transport India நிறுவனத்திற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் அன்று Alstom Transport India நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ […]
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்க வேண்டும் -சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியா், தனியார் கருத்தரித்தல் மையத்தை அணுகுகின்றனா் எனவும் தனியார் மையத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் செயற்கை கருத்தரித்தல் செய்யப்படுகிறது எனவும் இதனால், ஏழை மக்கள் செயற்கை […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வுமையம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று நாளையும் […]
திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு -சீமானின் மீது மானநஷ்ட வழக்கு பதிவு !
திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார் மீது அவதூறு பரப்பியதற்காக, சீமான் மீது ரூ. 2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, டி.ஐ.ஜி வருண் குமார் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் […]
துணைவேந்தர் நியமனம் விவகாரம் |உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு !
துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமனறத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் […]