வால்பாறையில் சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக மீட்பு !

வால்பாறை அருகே சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா-மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தூக்கிச் சென்றது. திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு […]

சிவகங்கையில் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி மட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கைபட்டி போன்ற ஊர்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி, கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். தாங்கள் கொண்டு […]

நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 23 முதல் 27-ஆம் […]

சென்னையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை -காவல் ஆணையர் அருண் உத்தரவு !

சென்னையில், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் தண்ணீர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, வாக்கின்ஸ் தெரு சந்திப்பில், சிறுமி சவுமியா, இருசக்கர வாகனத்தில் தாயுடன் அமர்ந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி தலை நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வேலை நேரங்களில் […]

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பழவேற்காட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற படகுப் போட்டி !

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பழவேற்காட்டில் நடைபெற்ற படகுப் போட்டியில் முதல் பரிசு வென்றவருக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாரத் ஒற்றுமை படகு போட்டி நடைபெற்றது. பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் படகுப் போட்டியை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி […]

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து […]

மாநகராட்சி, நகராட்சிகளில் ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவு !

மாநகராட்சி, நகராட்சிகளில் 1,132 இடங்களில் உள்ள காலனி உள்ளிட்ட ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னதாக சாலைகளின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுப் பெயர்களை நீக்கி […]

விமான நிலையம் அருகில் லேசர் ஒளியைப் எழுப்பக்கூடாது – சென்னை விமான நிலையம் அதிரடி!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் ஒளியைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிகழ்வு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விமான நிலைய நிர்வாகமும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே சென்னை விமான […]

2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் […]