தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை தஞ்சை, திருவாரூர், […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 93.80 – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 71,239 மாணவர்களில் 8 லட்சத்து 17,261 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் […]
விருதுநகர் | இரண்டு இருசக்கர வாகனம்நேருக்கு நேர் மோதி இருவர் பலி !
அருப்புக்கோட்டையில் எதிரே வந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 23. காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது […]
பாலியல் வழக்கு |மதபோதகர் ஜான் ஜெபராஜ் நிபந்தனை ஜாமின்வழங்கியது -சென்னை உயர்நீதிமன்றம்!
பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர் கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது,நிகழ்ச்சிக்கு வந்த 17 […]
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறக்க அனுமதி -தோட்டக்கலைத்துறை!
கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை இரவு 7 மணி வரை அனுமதிப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, நட்சத்திர ஏரி போன்ற […]
மதுரை சித்திரை திருவிழா….கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோலாகலம் !
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக, தெற்கு மாசி வீதி அருள்மிகு வீரராகவப் பெருமாள் வெள்ளிக் […]
கவிப்பேரரசு வைரமுத்து தாயார் உடல்நலக் குறைவால் காலமானார் !
கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பூர்வீக வீட்டில் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் வசித்து வந்தார். இந்நிலையில் 92 வயதான அங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று இயற்கை எய்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கவிப்பேரரசு வைரமுத்து தனது தாயாரின் உடலைக கண்டு கண் கலங்கியதோடு […]
91ஆயிரத்தை தாண்டிய பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பம் !
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 7ம் தேதி தொடக்கி தொடங்கப்பட்டது பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் […]
நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு !
என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், திடீரென தீ […]
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் !
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்,பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில்,கூற்று – ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார் என ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு காரணம் – […]