தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 36 மணி […]

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் | சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள பிரேமலதா விஜயகாந்த்!

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இந்தநிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் . 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கின்றார்.அது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் மட்டுமே நிதி […]

தனியார் நிதி நிறுவன மோசடி |பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை!

தனியார் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சோ்ந்த முத்துக்குமரன் என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவனத்துக்கு மதுரை உள்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன என்று இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் இந்த நிதி நிறுவனத்தின் சொத்துகளை நிர்வாகிகள் விற்க […]

மழையில் நனைந்தபடியே படகு சவாரி – ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் !

கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், மழையில் நனைந்தபடியே படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், சேர்வராயன் குகைக் கோயில், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா போன்ற இடங்களில் குடும்பத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், கோடை மழையால் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனிடையே, […]

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்-உச்சநீதிமன்றம்!

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு கேரளா முன்பு அனுமதி வழங்கியது என்றும், ஆனால் தற்போது, […]

தூத்துக்குடியில் ஆம்னி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் -பிரேமலதா விஜயகாந்த் !

கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ”தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளாளன்விளை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி திரு.கெர்சோம், மோசஸ், ரவி கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா திருமதி.ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகில் உள்ள […]

சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு !

தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்து 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் […]

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை […]

புதுக்கோட்டை | சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம் !

புதுக்கோட்டை அருகே, முத்துமுனீஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்து முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு […]