IPL 2025 | புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி வெளியேற்றம் !

மழை காரணமாக, பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறீயது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து, நேற்று போட்டிகள் மீண்டும் தொடங்க இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை […]

இத்தாலி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர் அல்காரஸ்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியும் மோதினர். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் […]

மீண்டும் ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி தொடங்கும் -இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு […]

முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி !

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 […]

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அதிரடி வெற்றி !

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய லக்னோ, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் […]

IPL 2025 | மீண்டும் கேப்டனாக களம் இறங்கும் மகேந்திர சிங் தோனி உற்சாகத்தில் ரசிகர்கள் !

சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த போட்டியில் 10 அணிககள் பங்கேற்று வருகின்றனர். 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் […]

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதல் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ்-சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் […]

கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் 29 பந்தில் 60 ரன்களும், ரகுவன்ஷி […]

இன்று ..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல் !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் […]

மியாமி ஓபன் டென்னிஸ் – ஜாகுப் மென்சிக் பட்டம் வென்று அசத்தல் !

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் செக்குடியரசு வீரரான ஜாகுப் மென்சிக் ஆகியோர் மோதினர். இந்த நிலையில்,விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7 க்கு 6 மற்றும் 7 க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் […]