இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் […]

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி | போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதல் !

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஒற்றையா் அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 […]

சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !

சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உருவாகியுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தை இந்தியாவின் ‘தங்க மகன்’ […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்குள்ள லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நான்காம் நாள் […]

ஐ.சி.சி.’ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் !

ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி பெயர் […]

ஐ.பி.எல் | பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி-தனது முதல் கோப்பையை பெற்று அசத்தல் !

18-வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த […]

IPL | மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை […]

69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதல் !

ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் […]

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 91 […]

ஐ.பி.எல் 61 வது போட்டியில் அதிரடியாக விளையாடி ஐதராபாத் அணி வெற்றி !

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணி, அபார வெற்றிபெற்றதுடன் லக்னோ அணியை பிளேஆப் சுற்றிலிருந்து வெளியேற்றியது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் […]