ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் இந்தியாவின் 19 வயதே ஆன இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா […]
இந்தியா – இங்கிலாந்து மகளிர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது !
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் […]
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற கமல்ஹாசன்!
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். நேற்றைய 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி | போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா மோதல் !
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் – அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஒற்றையா் அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் அனிசிமோவா 6-4, 4-6, 6-4 […]
சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா !
சர்வதேச ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உருவாகியுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தை இந்தியாவின் ‘தங்க மகன்’ […]
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்குள்ள லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நான்காம் நாள் […]
ஐ.சி.சி.’ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் !
ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி பெயர் […]
ஐ.பி.எல் | பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி-தனது முதல் கோப்பையை பெற்று அசத்தல் !
18-வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த […]
IPL | மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை […]