வக்ஃப் திருத்த சட்டத்தால் வன்முறை களமாக மாறிய மேற்குவங்கம் !
மேற்குவங்கத்தில் வக்ஃப்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியதையடுத்து, இத இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம், ஜான்கிபூரில் ஏராளமானோர் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. அப்பொய்ஜி போராட்டக்காரர்கள்,ஒரு கட்டத்தில் காவல் துறையின் வாகனத்தை கவிழ்த்து […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – இன்று முதல் அமல் !
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில்,சமையல் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் […]
லக்னோவில் வெஜ் பிரியாணிக்கு பதில் அசைவ பிரியாணி – உணவக உரிமையாளர் கைது !
லக்னோவில் வெஜ் பிரியாணி ஆடர் செய்த பெண்ணுக்கு மாறாக அசைவ பிரியாணி அனுப்பி வைத்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி பண்டிக்கை வரும் ஏப்ரல் மாதம் 7 தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்காக பலரும் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து வருவது வழக்கம். வட இந்திய மாநிலங்களில் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தான், உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் வசிக்கும் […]
சில மணிநேரத்திலே பழுதான பாம்பன் ரயில் பாலம் !
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரத்திலேயே பழுதானது பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நேற்று 544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் ஹைட்ராலிக் முறையில் இயங்குகிறது. இந்தப் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல் செல்லும்போது, செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு பாலம் தூக்கப்படுகிறது. இந்நிலையில், செங்குத்து தூக்கு […]
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]
FICCI-யின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமனம் !
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் (தலைவர் & நிர்வாக இயக்குநர், இந்திரா ப்ராஜெக்ட்ஸ், சென்னை)தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் வணிக உச்சிமாநாடுகள் மற்றும் முதன்மையான தொழில் நிகழ்வுகளில் இவர் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !
13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது […]
மாநிலங்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா !
மக்களவையைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 […]
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி !
இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயம்பு வாழ்க்கை பத்திக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், இமாச்சல பிரதேச தலைநகர் குல்லுவில் உள்ள குருத்வாரா மணிகரன் சாஹிப் அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]