பிரதமர் மோடியை சந்தித்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு !
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பிய அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்தனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதைத் தடுத்திட, ஒன்றிய அரசு, தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது. […]
கேரள கடற்கரையில் மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வரும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் !
கேரள கடற்கரையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்து, தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த […]
ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்த ரயில்வே துறை முடிவு !
புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் […]
இடுக்கி | இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் மீட்பு !
இடுக்கியில் இறகு நீர்வீழ்ச்சியில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இறகு நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது, அங்கிருந்த பாறையின் இடையே இளைஞர் மாட்டிக்கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் கயிற்றின் உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கரைக்கு மீட்கப்பட்ட இளைஞர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் , கேரளாவிற்கு சுற்றுலா வந்ததும் […]
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் -இணைய சேவை துண்டிக்கப்பட்டு,144 தடை உத்தரவு !
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பாடு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மிகப்பெரிய வன்முறை வெடித்து 260 பேர் பலியாகினர். அடுத்தடுத்த கிளர்ச்சிகளால், மாநிலத்தில் அமைதி குலைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பிரண் சிங் ராஜிநாமா செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் மணிப்பூர் […]
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கனடா அரசு!
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது, மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள […]
இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் உள்ளனர் -தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம்!
புரட்சியாளர் அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில், விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த கிரேஸ் – இன் – வழக்குரைஞா் மையத்தில் புரட்சியாளர் அம்பேத்கா் 1922-ம் ஆண்டு பாரிஸ்டா் பட்டம் பெற்றார். அதை நினைவுகூறும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் […]
இந்தியாவில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று பாதிப்பு !
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கொரனோ பெருந்தொற்று சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் […]
உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை இன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி !
காஷ்மீரில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து திறந்துவைத்துள்ளார். காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டத்தின் நிறைவாக, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். அதோடு, உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி இன்று திறந்துவைத்துள்ளார். சுமார் ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ள பிரதமா் மோடி, பாகிஸ்தானுக்கு […]