கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு தடை -பெங்களூரு நீதிமன்றம் !

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]

திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை-ஒன்றிய சுகாதாரத்துறை !

திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்தது. ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு வருவதாக தகவல் பரவியது. இந்த தகவல் மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த […]

நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு !

ஜூலை 21ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்கள் மட்டும் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது எனவும் கிரண் ரிஜிஜூ மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் !

பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,853 கோடி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட […]

மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவிப்பு !

மகாராஷ்டிராவில் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இந்தி மொழி திணிப்பதை கைவிடுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மகாராஷ்டிராவில் ஆங்கிலம் மற்றும் மராத்தி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தி விருப்ப மொழியாக மட்டுமே கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தி […]

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு !

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை […]

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது !

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக் காலம் கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16 ஆம் தேதி முதல் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வேர்க்கோடு, மண்டபம், ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ஒரு படகில் சென்ற […]

41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது நபர் சுபான்ஷு சுக்லா!

41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது நபர் என்ற சாதனையை விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி […]

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறப்பு !

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளுக்கும் வரும் நீரை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 […]

கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் -பிரதமர் மோடி!

கிராமப்புறங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அப்போது சுரங்கம், ரயில்வே மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் பொது மக்கள் நலனுக்கும் இந்த திட்டம் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் […]