ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அளித்துள்ள கனடா அரசு!

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஜூன் 15ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு, கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவிட்டுள்ளார்.
அதில், “மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி எனவும் மக்களுக்கு இடையிலான உறவுகளால் பிணைக்கப்பட்ட, துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதையுடன் வீரியத்துடன் இணைந்து செயல்படும் என பதிவிட்டுள்ளார்.