கம்போடியா மோதல் குறித்து அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் பேச்சு !

கம்போடியா மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்தித்துவருகின்றனர்.
கம்போடியாவின் அண்டை நாடானா தாய்லாந்து உடன் அந்நாட்டின் உறவு கடந்த மே மாதத்திலிருந்து நீண்ட காலமாக நிகழ்ந்து வந்த எல்லைத் தகராறு மே 28 அன்று சிறு மோதலுக்கு வழிவகுத்தது.
இந்த மோதல் சர்ச்சைக்குரிய பகுதியில் தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்திக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சண்டையில், காம்போடியா சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு இருநாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில்தான் கட்டாய ராணுவ சேவை தொடர்பாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “இந்த மோதலின் அத்தியாயம் நமக்கு ஒரு பாடம். மேலும் நமது இராணுவத்தை சீர்திருத்துவதற்கும், நமது இலக்குகளை மறுபரிசீலனை செய்யவும், மதிப்பிடவும், நிர்ணயிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.
2026 முதல், கட்டாய இராணுவ சேவையை செயல்படுத்தப்படும். இது உறுதியான முடிவாகும். இராணுவத்தை மேம்படுத்தவும்,பணியாளர்களின் பற்றாக்குறையை நிரப்பவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமது தேசிய பாதுகாப்பு, நமது இராணுவத்தை கட்டியெழுப்புதல், யாருடைய பிரதேசத்தையும் ஆக்கிரமிப்பதற்காக அல்ல, மாறாக நமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக..”
எனத் தெரிவித்திருக்கிறார்.18 முதல் 30 வயதுக்குள் உள்ள ஒவ்வொரு குடிமகனும் 18 மாதங்கள் இராணுவத்தில் சேவை செய்ய வேண்டுமென்று கடந்த 2006 ஆண்டு அந்நாட்டில் சட்டமியற்றப்பட்டிருந்தது. தற்போது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த சட்டம் தொடர்பாகப் பேசிய பிரதமர் ஹன் மானெட் 18 மாத சேவைக் காலம் 24 மாதங்களாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்’.