நாடாளுமன்றத்தின் இரு அவைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு !

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அவை நடவடிக்கைகள் அனைத்து ஒத்திவைத்துவிட்டு விவாதத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் மூன்றாவது நாளாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளது.

முதல் இரண்டு நாள்கள் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கிய நிலையில், மூன்றாவது நாளாக இன்று காலையே இரண்டு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலிலும் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts