கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு தடை -பெங்களூரு நீதிமன்றம் !

கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கன்னட மொழியைவிட மொழியியலாளர் குறித்த மேன்மையான அறிக்கை அல்லது கருத்துகளை பதிவிடவோ வெளியிடவோ எழுதவோ கூடாது.
கன்னட மொழி, இலக்கியம், அதன் மக்கள், கலாசாரத்தைப் புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிட கமல்ஹாசனுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது