வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல் – மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி !

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின.
இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தின் தெருக்களில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது.
சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளுடன், அவர்களை சட்டவிரோத குடியேறிகளாக முத்திரை குத்த முயற்சிகள் நடக்கின்றன என அக்கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
இதில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.