உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று தொடங்கியது. லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் களம் இறங்கினர். 20 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லபுஷேன் 56 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்