மதுரையில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் !

மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிறுத்தப்பட்ட பின்னர், பேருந்தை எடுப்பதற்கு தாமதமானது.
இதனையடுத்து பயணிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிறுத்தப்பட்ட பின்னர் பேருந்தை எடுப்பதற்கு தாமதமான நிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பயணிகளுக்கும் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த ஓட்டுநரை உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென தனது காலனியால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டார். இதனிடையே, உதவி மேலாளர் மாரிமுத்து, மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்