ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் மாயம் !
ரஷியாவில் 50 பேருடன் சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் காணாமல் போனதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 46 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை, ஏஎன்-24 பயணிகள் விமானம் இழந்துவிட்டதாகவும், விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, […]
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு | குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11-இல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சென்ற புறநகா் ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 180 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக 12 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தியது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரும் […]
சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 255 ரூபாய்க்கும், சவரனுக்கு 1000 […]
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3வது நாளாக போராட்டம் !
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிடக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற […]
தருமபுரியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து !
தருமபுரி அருகே வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு !
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், அவை நடவடிக்கைகள் அனைத்து ஒத்திவைத்துவிட்டு […]
இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளீர் அணி அபார வெற்றி !
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளீர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 13 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், […]
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் !
நீலகிரி, தேனி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, […]
புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணியை துவங்கியது தேர்தல் ஆணையம்!
ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. […]
திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி !
திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு […]