தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
நாளை மற்றும் நாளைமறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 30 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை-பிரதமர் மோடி அறிவிப்பு !
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் வணக்கம் சோழநாடு’ எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என தெரிவித்தார் . மேலும்,சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது என்றும், சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனதாகவும் தெரிவித்தார். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை […]
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு !
ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு (அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு […]
மேட்டூர் அணையின் நீர் வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு !
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன […]
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு ..5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 58 அடியிலிருந்து 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சென்னை அப்பலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும்வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான கழக உடன்பிறப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கையில் […]
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இரண்டு நாள் நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இரவு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர், 452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் […]
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதலில் 32 உயிரிழப்பு !
தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர […]
திருவள்ளூர் சிறுமி பாலியல் குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல் !
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12 ஆம் தேதி 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரையே பின்தொடர்ந்து வந்த வடமாநில இளைஞர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை -மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் !Justice Center
மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன் இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா். இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த […]