அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? என்று ஜூலை 21ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது, உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை -டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை, தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நாளை காலை நடைபெறுகிறது. அதன்படி இந்த போட்டி தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 3 8 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில், ஆண்கள் […]
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் குற்றவாளி- திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு !
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய வழக்கில் கைதான ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண், திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி வழக்கம் போல தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் […]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் 15,16ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !
நீலகிரி, கோவை மாவட்டங்களில் 15,16ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 15 மற்றும் 16ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், […]
14ம் தேதி பூமி திரும்ப இருக்கும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து வரும் 14ம் தேதி இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா புறப்படுகிறார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த 4 வீரர்கள் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26ம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி […]
15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்றும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும் என்றும் இந்த முகாம்களில் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு தடை -பெங்களூரு நீதிமன்றம் !
கன்னட மொழி குறித்த அறிக்கைகளை வெளியிட கமலஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. கன்னட மக்களின் உணர்ச்சிகளை கமலின் பேச்சு புண்படுத்துவதாக கர்நாடக நீதிமன்றத்தில் கன்னட அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த […]
வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி !
வா.மு. சேதுராமன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட […]
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்லது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ […]
இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு -பி.சி.சி.ஐ அறிவிப்பு !
அடுத்த மாதம் நடைபேற இருந்த இந்தியா வங்கதேச வெள்ளைப்பந்து தொடர் ஓத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது. இந்த தொடர் ஆகஸ்ட்டு மாதம் 17ம் தேதி தொடங்க இருந்த நிலையில் வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாக […]