சிரியா ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் !

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு சிரியாவின் ஸ்வீடா பகுதியில் சிறுபான்மை ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் போராளிகளுக்கும், சன்னி பெடோயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் போக்கு நீடித்தது. இந்த நிலையில், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் மீது ஒரு […]

புதுக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கண்டெடுப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற 2ம் கட்ட அகழாய்வுப் பணியில் 1982 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2024 மே மாதம் தொடங்கியது. மொத்தம் 17 குழிகள் அமைத்து, நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இங்கு நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், இங்கு முதல் கட்ட அகழாய்வு பணி, […]

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க உள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூற வேண்டும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் […]

நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு !

நியூயார்க் நகரில் கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நெடுஞ்சாலைகள் மற்றும், சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நியூயார்க் நகரில் மெட்ரோ ரெயில் […]

அதிரடியாக குறைந்த தங்கத்தின் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் […]

இந்தியா – இங்கிலாந்து மகளிர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது !

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல்முறையாக 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் […]

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற கமல்ஹாசன்!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தல் – மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி !

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின. இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு […]

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து பூமிக்கு வந்தது டிராகன் விண்கலம் !

சர்வதேச விண்வெளிப் பயணத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமிக்கு டிராகன் விண்கலம் இன்று பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். 31 நாடுகளின் 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் இவர்களுடைய 18 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, சர்வதேச விண்வெளி […]