தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 13ம் தேதி முதல் […]
உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என தோணுதா ? அப்போ இது உங்களுக்கு தான் !
அதிக மன அழுத்தம் உடையவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உத்வேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? இது, புதிய உணவுக்கு வழிவிடச் சொல்லி பெருங்குடலுக்கு வயிறு சமிஞை அளிக்கும் இயல்பான உடல் செயல்பாடு தான். ஆனால், இதேபோல் தினமும் நிகழ்கிறது என்றாலோ இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது என்றாலோ இது கவனிக்க வேண்டியது. பால் பொருள்கள், காரம் நிறைந்த உணவுகள் போன்ற குறிப்பிட்ட உணவுகள் சார்ந்த ஒவ்வாமை, அதிக […]
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 480ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இறுதியில் எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து, 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 200 […]
IPL 2025 | மீண்டும் கேப்டனாக களம் இறங்கும் மகேந்திர சிங் தோனி உற்சாகத்தில் ரசிகர்கள் !
சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த போட்டியில் 10 அணிககள் பங்கேற்று வருகின்றனர். 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் […]
கும்பகோணம் | நாகேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா !
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் திரளான பக்தர்கள் நாகேஷ்வரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து […]
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு !
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது. இந்நிலையில், இன்று இந்திய […]
தைவான் நாட்டில் நிலநடுக்கம் அதிர்ச்சியில் மக்கள் !
தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தி கட்டிடங்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சமடைந்தனர். தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலன் நகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் 69 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு […]
சிறப்பாக பணியாற்றி வரும் காவல் துறை நண்பர்களுக்கு பாராட்டு !
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டி தற்போது,அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை,கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில்,தற்போது காவல்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.குற்ற செயல்களில் ஈடுபட்டும் குற்றவாளிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்துவருகின்றனர். இந்தநிலையில்,இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ரா.சீனிவாச பெருமாள்( SP ) அவர்களால் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் […]
‘ஜிப்லி புகைப்படத்தால் தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம்’-சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை !
ஜிப்லி புகைப்படங்களை பயண்படுத்தி தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப் பிரிவு வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள் எனவும், ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது […]
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் !
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக காலமானார். 93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் அவர் பதவி […]