“மோசடி முதலீட்டு வலைத்தளங்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி […]
டெல்லியில் திடீரென வீசிய புழுதிப்புயலால் மக்கள் அதிர்ச்சி !
டெல்லியில் திடீரென வானிலை மாற்றமாகி புழுதிப்புயல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், பல விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. புழுதிப்புயலுடன் சேர்த்து லேசான மழையும் பெய்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்றும் வீசியதால் இரவு 9 மணிவரை […]
“6 மாதம் தே.மு.தி.க வளர்ச்சி பணியில் கவனம் செலுத்த உள்ளோம்”- பிரேமலதா விஜகாந்த் !
தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.அந்த வகையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிட போவதாக, சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் […]
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி – அதிரடி காட்டும் மாடுபிடி வீரர்கள் !
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். விறுவிறுப்பாக […]
விருதுநகர்| ராட்டினத்தில் இருந்து பெண் கீழே விழுந்து விபத்து !
விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து திடீரென பெண் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி பொங்கலையொட்டி, விருதுநகரில் தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பொருட்காட்சிக்கு சென்ற கவுசல்யா என்பவர் அங்குள்ள ராட்டினத்தில் சுற்றியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, கவுசல்யா திடீரென தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மீட்டு பொருட்காட்சியில் தயார் நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராட்டினம் […]
கன்னியாகுமரி | மரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து !
திருவட்டாறு அருகே மரம் பாரம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து கோவில்பட்டிக்கு மரம் பாரம் ஏற்றிச் சென்ற லாரி திருவட்டார் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஓர்க்சாப் மற்றும் கடைகளின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கடையின் முன் பகுதியில் விடபட்டிருந்த நான்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உட்பட […]
நியூயார்க் |சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதை பற்றி நியூயார்க் மேயர் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த […]
உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையும் அரசு ஊழியர்களின் விவரமும் !
உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஊழியர்களில் நிர்ணயிக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளார். அரசு துறைகளில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறி, அவர்களைக் குறைக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி அதிக மக்கள் தொகைக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும் நாடான ஆஸ்திரேலியாவில்,1,000 மக்களுக்கு 143 அரசு ஊழியர்கள் நிர்னையித்துள்ளனர்.மேலும்,அந்நாட்டின் மொத்த அரசு ஊழியர்களில் 29 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர் […]
தஞ்சாவூர் | பல்லடத்தில் லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்து !
பல்லடம் அருகே தனியார் ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மனைவி கல்யாணி மற்றும் அவரது மகள் பபிதா ஆகிய மூன்று பெரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை சாலையோரம் […]
பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரம் – தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் !
பொள்ளாச்சியில் பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இச்சூழலில் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார். […]