தமிழகத்தில் 3 தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்க கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் […]

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கேப்டன் விஜகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. மேலும்,கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலமாக விஜகாந்த் கேப்டன் விஜகாந்த் என்று மக்களால்செல்லமாக அழைக்கப்பட்டார். பிலிம் […]

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி உடனடியாக அமல்படுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் !

உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டி சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் தலைசிறந்த நிறுவனமான என்எல்சி நிறுவனம், ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக, விரிவாக்கம் செய்து உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களில் 60% தொழிலாளர்கள் […]

அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த்!

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையில் பென்சிலை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் அரிவாளால் வெட்டியதை கண்டித்து சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, […]

நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனால் பரபரப்பு !

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இதனை தடுக்க முயன்ற ஆசிரியருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக […]

4 கோடி ரூபாய் சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் !

பாஜக அரசு அளித்த 4 கோடி ரூபாய் பரிசை ஏற்றதற்காக, விளையாடு வீரங்கனை வினேஷ் போகத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு வினேஷ் போகத் பதிலளித்துள்ளார். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் […]

தமிழ்நாடு | நேற்று நள்ளிரவில் இருந்து மீன் பிடி தடைக்கலாம் அமல் !

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் […]

பாலியல் விவகாரம் | கோவையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் அதிரடி கைது !

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 […]

திருவண்ணாமலையில் அரசு பேருந்தும் கரும் நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதேசமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கைலாஷ், சதீஷ்குமார், சாருஷ் ஆகியோர் பெங்களூரில் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, […]

ஈரோட்டில் பாட்டி பேரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு !

சத்தியமங்கலம் அருகே பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொட்டகாஜனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா, அவரது மனைவி தொட்டம்மா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராகவன் சூசையபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ராகவன் தனது வீட்டை ஒட்டியுள்ள பாட்டி சிக்கமா வீட்டில் இரவு நேரத்தில் அவ்வப்போது உறங்கச் செல்வது வழக்கம். […]