இன்று ..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதல் !

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாதை எதிர்கொள்கிறது. ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் […]

“தமிழில் மட்டுமே பெயர் பலகை வைக்க வேண்டும்” – திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும். […]

3000தாண்டிய உயிரிழப்பு – மியான்மர் நிலநடுக்கம் !

மியான்மர் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்ததுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் […]

ஒரே கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி !

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை 50-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்தக் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் கிராமத்தில் முகாம் அமைத்து […]

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

ராம‌ நவமி…கருட வாகனத்தில் காட்சி அளித்த தருணம் அது…!

பெருமாள் பெரிய திருவடி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். தஞ்சை மாவட்டம் கிழக்கே அமைந்துள்ள புன்னைநல்லூர் என்ற பகுதியில்,ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்பட்டு வருகின்றனர்.400ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் ஸ்ரீ கோதண்டராமரும் ,ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருள்பாலிக்கின்றனர். மேலும்,இக்கோவிலில் சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளராமர், சீதை, இலக்குவன் ஆகியோரின் உற்சவர் சிலைகள் அமைந்துள்ளது . பிரசித்தி பெற்ற இந்த […]

“கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் “-பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் !

தமிழக சட்டசபையில் இன்று (02.04.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி சற்றுமுன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ”கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இதை மத்திய, […]

ஆன்லைன் விளையாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பதில் !

ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதை ஏற்க முடியாது என, ஆன்லைன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. […]

நீங்க தண்ணீர் குடிக்க மாட்டிங்களா .. அப்போ இது உங்களுக்கு தான் ..!

தண்ணீர் குடிக்காததால் வரும் எட்டு விளைவுகளை இந்த தொகுப்பில் காணலாம். தண்ணீரை குடி …தாகத்தை தீர்த்துக்கொள் ..!

ஜப்பானை உலுக்க இருக்கும் நிலநடுக்கம் -பகிர் தகவல் உள்ளே !

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகின் பால்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த மார்ச் 28 ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் மணல் போல் சரிந்து விழுந்தனர்.இந்த நிலையில், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என […]