சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு !

“கொம்பு சீவி” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த தேமுதிக நிறுவுனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் இளையமகன் ஆனா சண்முக பாண்டியன் ‘மதுர வீரன், படை தலைவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, தற்போது “கொம்புசீவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா போன்ற நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை […]

FICCI-யின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமனம் !

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) இணைத் தலைவராக திரு. பூபேஷ் நாகராஜன் (தலைவர் & நிர்வாக இயக்குநர், இந்திரா ப்ராஜெக்ட்ஸ், சென்னை)தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் வணிக உச்சிமாநாடுகள் மற்றும் முதன்மையான தொழில் நிகழ்வுகளில் இவர் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை – உச்சநீதிமன்றம் தள்ளுபடி !

13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செப் அறக்கட்டளை சார்பில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நம் நாட்டில், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை கட்டுப்பாடின்றி அணுக முடிவதால், அவை குழந்தைகளிடம் முன்னெப்போதும் இல்லாத மனநல நெருக்கடியை ஏற்படுத்துகிறது […]

பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை !

பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப் துல் கலாம் பெயர் சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்த அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சிங்கை ஜின்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். […]

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசை கண்டித்து அறிக்கை – பிரேமலதா விஜயகாந்த் !

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதைக் கண்டித்தும், தர்பூசணி பழங்களில் சாயம் கலந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டவுள்ளார். அந்த அறிக்கையில்,”விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தால் […]

தங்கம் விலை அதிரடி குறைவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை […]

மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் – பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு !

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து,அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் மறைந்த மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் நேற்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு […]

கொல்கத்தா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. வெங்கடேஷ் 29 பந்தில் 60 ரன்களும், ரகுவன்ஷி […]

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை !

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது என்றும் இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றூம் இதனால், கோயில் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு நிதி ஒதுக்கியது என்றும் இந்த நிதி முறையாக […]

மாநிலங்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா !

மக்களவையைத் தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 […]