தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு !
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அரிக்கரையில்,”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற (30.04.2025) புதன்கிழமை காலை 09.00 மணியளவில்,தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, K.V.மஹாலில் நடைபெற உள்ளது. அதில், தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால […]
தங்கத்தின் விலை குறைவு – தங்கம் வாங்க சரியான நேரம் இது தான் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு 200 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இறுதியில் எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைந்தது. அந்தவகையில், வாரத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத்த தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 8 ஆயிரத்து 285 ரூபாய்க்கும், சவரனுக்கு […]
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீரானதால் 3 நாட்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு […]
சில மணிநேரத்திலே பழுதான பாம்பன் ரயில் பாலம் !
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சில மணி நேரத்திலேயே பழுதானது பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நேற்று 544 கோடி மதிப்பீட்டில் 2.08 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த புதிய பாம்பன் ரயில் பாலம் ஹைட்ராலிக் முறையில் இயங்குகிறது. இந்தப் புதிய ரயில் பாலம் வழியாக கப்பல் செல்லும்போது, செங்குத்தான நிலையில் 24 கயிறுகளைக் கொண்டு பாலம் தூக்கப்படுகிறது. இந்நிலையில், செங்குத்து தூக்கு […]
இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியம் – வீரமுத்துவேல் !
இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் – 3 திட்ட இயக்குனருமான டாக்டர் ப.வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது விண்வெளித்துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்றும் மாணவர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள […]
தமிழகம் முழுவதும் தேமுதிக உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !
தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பாக தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. டிஜிட்டல் வாயிலாகவும் தங்களது பதிவுகளை பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முதல்முறை வாக்காளர்கள் யாவரும் இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணையும் வசதி உண்டு. 2026 தேர்தல் பணிகளை தற்போது தேமுதிக உறுப்பினர் சேர்க்கையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து, பல்வேறு கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருகின்றது.மேலும், தற்போது இந்த உறுப்பினர் சேர்க்கையும் மக்கள் மத்தியில் நல்ல […]
பாம்பன் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு !
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இன்று தொடங்கி வைத்தார். ராமேஸ்வரத்தில் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை, ராம நவமி தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கையெழுத்தையாவது தமிழ் மொழியில் போடக்கூடாதா?” எனக் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி கொழும்பிவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டின் அதிபர்அநுரா குமார திசநாயகேவை சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரிடம் மோடி பேச்சு நடத்தினார். அதுமட்டுமின்றி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி முன்வைத்தார். இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார். […]
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை முதல் […]
அம்பத்தூரில் மாடு முட்டி முதியவர் காயம் – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு !
அம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை அம்பத்தூர் பிரித்திவிப்பாக்கம் பிரதான சாலை அப்பர் கெனால் தெரு அருகே சாலையில் சுற்றித்திரிந்த பசுமாட்டிற்கு பெண்மணி ஒருவர் தண்ணீர் வைத்த நிலையில், தண்ணீரை குடித்துவிட்டு சாலையில் நடந்து சென்ற முனுசாமி என்பவரை தூக்கி வீசியுள்ளது. இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் பொற்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என […]